குழந்தைகளுக்கான வீசாக்கள்

இந்தப் பக்கத்தில்:

கேள்விகளும் பதில்களும்

கே: குழந்தைகளுக்கு வீசா தேவையா?

ப: அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கு குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் அனைவருக்கும் வீசா ஒன்று அவசியமாகிறது அல்லது அவர்கள் வீசா தள்ளுபடித் திட்டம் போன்ற பிரத்தியேகத் திட்டம் ஒன்றின் வாயிலாக வீசா இல்லாமல் பயணம் செய்வதற்கு அவர்கள் தகுதியடைந்தாக வேண்டும்.

கே: வயது நிரம்பியவர்களைப் போன்று அதேயளவு விண்ணப்பக் கட்டணத்தைத் தான் குழந்தைகள் செலுத்துகிறார்களா?

ப: ஆம்.

கே: குழந்தைகள் நேர்காணலுக்கு ஒரு நேரத்தைக் குறித்துக் கொள்ள வேண்டுமா?

ப: ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒரு நேர்காணலைக் குறிப்பது அவசியமாகிறது.

கே: அனைத்துக் குழந்தைகளுமே, அவர்களது நேர்காணலுக்குக் குறித்த நேரத்தில் நேரில் வர வேண்டுமா?

ப: ஆம், அனைத்துக் குழந்தைகளுமே, அவர்களது நேர்காணலுக்குக் குறித்த நேரத்தில் நேரில் வர வேண்டும்.