பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக வீசா
இந்தப் பக்கத்தில்:
- மேலோட்டம்
- தகுதிகள்
- கட்டுப்பாடுகள்
- ஒரு வருகையாளர் வீசா கொண்டு பயணிப்பது
- ஒரு தற்காலிகப் பணி வீசா கொண்டு பயணிப்பது
- சார்ந்திருப்பவர்கள்
- விண்ணப்ப உருப்படிகள்
- விண்ணப்பிப்பது எப்படி
- ஆதார ஆவணங்கள்
- சார்ந்திருப்பவர்களுக்கான ஆதார ஆவணங்கள்
- இன்னும் அதிகத் தகவல்கள்
மேலோட்டம்
ஊடக (I) வீசா என்பது, தங்களது சொந்த அலுவலகத்தை அயல்நாட்டில் வைத்திருக்கும் அதே வேளையில், தங்களது தொழிலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்குத் தற்காலிகமாகப் பயணம் செய்கிற அயல்நாட்டு ஊடகப் பிரதிநிதிகளுக்கான குடிவரவாளர் அல்லாதோர் வீசாவாகும். குடிவரவுச் சட்டத்தின் கீழ் உள்ள சில நடைமுறைகள் மற்றும் கட்டணங்கள், பயணம் செய்பவரின் சொந்த நாட்டின் கொள்கைகளுக்குத் தொடர்புடையவையாக இருக்கின்றன மேலும் அதற்குப் பதிலாக, அமெரிக்காவும் அதையொத்த பழக்கத்தைக் கடைபிடிக்கிறது, அவற்றைத் தான் நாங்கள் “பிரதிச்சலுகை” என்று அழைக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்டின் அயல்நாட்டு ஊடகப் பிரதிநிதிகளுக்கு ஊடக வீசாக்களை வழங்குவதற்கான நடைமுறைகள், வீசா விண்ணப்பதாரரின் சொந்த அரசாங்கம் அமெரிக்காவில் இருந்து செல்கிற ஊடக/பத்திரிக்கைப் பிரதிநிதிகளுக்கு இதையொத்த சிறப்புரிமைகளைக் கொடுக்கின்றதா, அல்லது பிரதிச்சலுகை தருகிறதா என்பதைப் பரிசீலிக்கின்றன.
தகுதிகள்
அமெரிக்கக் குடிவரவு சட்டம் சொல்கிறபடியான, ஊடக வீசாக்களுக்குத் தகுதியடைவதற்கு விண்ணப்பதாரர்கள் சந்தித்தாக வேண்டிய மிகக் குறிப்பான தேவைகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஊடக வீசாவிற்குத் தகுதியடைய, (I) வீசா விண்ணப்பதாரர்கள் ஊடக வீசா வழங்கப்படுவதற்கு உரிய முறையில் தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை நிரூபித்துக் காண்பித்தாக வேண்டும்.
ஊடக வீசாக்கள் என்பவை, “அயல்நாட்டு ஊடகப் பிரதிநிதிகளுக்கானவை” ஆகும், இதில் அமெரிக்கக் குடிவரவுச் சட்டத்தின் கீழ், தங்களது தொழிலில் ஈடுபடுவதற்காக அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற நிருபர்கள், திரைப்பட ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதையொத்த வேலைகளில் உள்ள நபர்கள் போன்று அயல்நாட்டு ஊடகச் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானவையாக உள்ள செயல்பாடுகளையுடைய பத்திரிக்கை, வானொலி, திரைப்படம் அல்லது அச்சுத்துறைகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். விண்ணப்பதாரர், அயல்நாட்டில் தனது முதன்மை அலுவலகத்தைக் கொண்டுள்ளதோர் ஊடக ஸ்தாபனத்திற்குத் தகுதிப்படுத்துகிற செயல்பாடுகளில் ஈடுபட்டாக வேண்டும். அந்தச் செயல்பாடு அத்தியாவசியமாக தகவல் சார்ந்ததாகவும், பொதுவாகவே செய்தி சேகரிக்கும் நடைமுறையோடு தொடர்புடையதாகவும், உண்மையான நடப்பு நிகழ்வுகளை அறிவிப்பதாகவும், ஊடக வீசாவிற்குத் தகுதியுடையததாகவும் இருந்தாக வேண்டும். ஒரு செயல்பாடு, ஊடக வீசாவிற்குத் தகுதியடைகிறதா என்பதைத் துணைத் தூதரக அதிகாரியே தீமானிப்பார். விளையாட்டு நிகழ்ச்சிகளைக் குறித்து செய்தி அறிவிப்பவை, வழக்கமாகவே ஊடக வீசாவிற்கு ஏற்றவையாகும். மற்ற உதாரணங்களில் அடங்குபவை, பின்வரும் ஊடகம் தொடர்பான செயல்பாட்டு வகைகள் ஆகும், ஆனால் இவை மட்டும் தான் என்றில்லை:
- ஒரு செய்தி நிகழ்வை அல்லது ஆவணப்படத்தைப் படம் பிடித்தலில் ஈடுபடுகிற அயல்நாட்டுத் தகவல் ஊடகத்தின் முதன்மைப் பணியாளர்கள்.
- படம் பிடிக்கப்படுகிற கருத்து தகவல் அல்லது செய்தியைப் பரப்புவதற்காக உபயோகிக்கப்படும் என்கிற பட்சத்தில் மட்டுமே, திரைப்படத்தைத் தயாரித்து வினியோகம் செய்வதில் ஈடுபட்டுள்ள ஊடக ஊழியர்கள் ஊடக வீசாவிற்குத் தகுதியடைவார்கள். கூடுதலாக, முதன்மை மூலம் மற்றும் நிதி வினியோகம் ஆகியவை அமெரிக்காவிற்கு வெளியே இருந்தாக வேண்டும்.
- ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றுகிற பத்திரிக்கையாளர்கள். தொழில்முறையிலான பத்திரிக்கை ஸ்தாபனம் வழங்கிய நம்பகச் சான்றிதழை வைத்திருக்கிற நபர்கள், முதன்மையாக வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு அல்லது விளம்பரம் செய்வதற்கான எண்ணத்தில் அல்லாமல், தகவல் அல்லது செய்தியைப் பரப்புவதற்காக ஒரு தகவல் அல்லது கலாச்சார ஊடகத்தினால் அயல்நாட்டில் உபயோகிப்பதற்காக தயாரிப்பு குறித்ததோர் ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றுகிறார்கள் என்றால். செல்லுபடியாகிறதோர் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் அவசியம் என்பதை தயவுசெய்து குறித்துக் கொள்ளுங்கள்.
- தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களின் பணியாளர்கள், தொழில்முறையிலான பத்திரிக்கையாளர் சங்கம் வழங்கிய நம்பகச் சான்றை வைத்திருக்கும் போது.
- அமெரிக்க நெட்வொர்க், செய்தித்தாள் அல்லது மற்ற ஊடக நிறுவனத்தின் அயல்நாட்டுக் கிளை அலுவலகம் அல்லது துணை நிறுவனத்திற்காகப் பணியாற்றுகிற அயல்நாட்டுப் பத்திரிக்கையாளர்கள், அயல்நாட்டுப் பார்வையாளர்களுக்காகவே அமெரிக்க நிகழ்ச்சிகளை அறிவிப்பதற்காக அமெரிக்காவிற்குப் போகிறார்கள் என்றால்.
- அந்த நாட்டைக் குறித்த உண்மையான சுற்றுலாத் தகவல்களை பரப்புவதில் முதன்மையாக ஈடுபடுகிற மற்றும் A-2 வீசா வகைப்பாட்டிற்கு உரிமை பெறாத, ஒரு அயல்நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிற, இயக்கப்படுகிற, அல்லது முழுமையாக அல்லது பாதியளவிற்கு மானியம் வழங்கப்படுகிற சுற்றுலா அமைப்புகளின் சான்றுபெற்ற பிரதிநிதிகள்.
- தொழில்நுட்பத் தொழிற்துறைத் தகவல்கள் தொழில்நுட்பத் தொழிற்துறைத் தகவல்களை வினியோகிக்கிற அமெரிக்க அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள்.
பின்வரும் அனைத்து வரன்முறைகளையும் சந்தித்தால் மட்டுமே சுதந்திர எழுத்தாளர்கள் I வீசாவிற்குப் பரிசீலிக்கப்படுவார்கள். அப்பத்திரிக்கையாளர்:
- தொழில்முறையிலான பத்திரிக்கையாளர் ஸ்தாபனம் வழங்கியதோர் நம்பகச் சான்றை வைத்திருந்தாக வேண்டும்
- ஓர் ஊடக ஸ்தாபன ஒப்பந்தத்தின் கீழ் இருந்தாக வேண்டும்
- முதன்மையாக வர்த்தக, பொழுதுபோக்கு அல்லது விளம்பரம் போன்றவற்றுக்கான எண்ணத்தில் அல்லாத தகவல் அல்லது செய்தியைப் பரப்பியாக வேண்டும்.
புகைப்படக் கலைஞர்கள் அமெரிக்க மூலத்திலிருந்து வருமானம் எதையும் பெறாத வரையில், புகைப்படம் எடுக்கும் நோக்கத்திற்காக B-1 வீசாக்களோடு அமெரிக்காவில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கட்டுப்பாடுகள்
ஊடக அல்லது பத்திரிக்கையாளர்களாக தங்களது தொழிலில் ஈடுபடுகையில், அயல்நாட்டு ஊடகத்தின் பிரதிநிதியாகத் தற்காலிகமாக அமெரிக்காவில் நுழைய விரும்புகிற, வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பங்கேற்கிறதோர் நாட்டிலிருந்து வருகிற அந்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள், அமெரிக்காவிற்கு வருவதர்கு ஒரு ஊடக வீசாவைப் பெற்றாக வேண்டும். ஒரு வீசா இல்லாமல் அவர்களால் வீசா தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பயணிக்க முடியாது, அல்லது அவர்களால் ஒரு வருகையாளர் வீசாவில் (வகை B) பயணக்கவும் முடியாது. அப்படிச் செய்ய முயற்சிப்பது, அமெரிக்காவில் நுழையும் இடத்தில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலுவலரால் அமெரிக்காவில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்படுவதில் போய் முடிந்து விடலாம். ஒரு வருகையாளர் வீசா அல்லது வீசா தள்ளுபடித் திட்டத்தை எவ்வெப்போது உபயோகிக்கலாம் என்ற சூழ்நிலைகளைப் பின்வரும் பட்டியல் விவரிக்கின்றது.
ஒரு வருகையாளர் வீசா கொண்டு பயணிப்பது
ஒரு வருகையாளர் வீசாவை, உங்களது பயண நோக்கம் பின்வரும் செயல்பாடுகளுக்காக இருக்கிற பட்சத்தில் உபயோகிக்கலாம்:
ஒரு மாநாடு அல்லது கூட்டத்தில் கலந்து கொள்ளுதல்
அமெரிக்காவில் இருக்கையில் அல்லது நாடு திரும்புவதன் பேரில் அக்கூட்டம் குறித்து செய்தி அறிவிக்காத, ஒரு பங்கேற்பாளராக மாநாடுகள் அல்லது கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குப் பயணம் செய்கிற ஊடகப் பிரதிநிதிகள், ஒரு பார்வையாளர் வீசாவில் பயணம் செய்ய முடியும். குடிவரவு சட்டத்தில் அதற்குறிய வித்தியாசம் என்ன வென்றால், அவர்கள் “தங்களது விடுப்பில் ஈடுபடுவார்களா” என்பதேயாகும்.
பேச்சு, விரிவுரை அல்லது கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிற சிறப்பு விருந்தினர்
ஒரு தொடர்புடைய அல்லது இணைப்பு பெற்ற இலாப நோக்கற்ற அமைப்பில், ஒரு இலாப நோக்கற்ற ஆராய்ச்சி ஸ்தாபனத்தில், ஒரு அரசாங்க ஆராய்ச்சி ஸ்தாபனத்தில், அல்லது அந்த விண்ணப்பதாரர் கௌரவ ஊதியம் பெறும் ஓர் உயர் கல்வி ஸ்தாபனம் ஒன்றில், சிறப்பு விருந்தினராகப் பேச்சு, விரிவுரை அல்லது மற்ற வழக்கமான கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடும் நோக்கத்திற்காக அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் போது, ஊடகப் பிரதிநிதிகள் ஒரு வருகையாளர் வீசாவை வைத்திருந்தாக வேண்டும். ஆயினும், அப்பேச்சுச் செயல்பாடு ஒரு ஸ்தாபனத்தில் ஒன்பது நாட்களுக்கு மிகாமல் இருந்தாக வேண்டும் மேலும் அப்பேச்சாளர் கந்த ஆறு மாதங்களில் அது போன்ற செயல்பாடுகளுக்காக ஐந்து ஸ்தாபனங்கள் அல்லது நிறுவனங்களுக்கு மேற்பட்டு ஊதியம் பெற்றிருக்க முடியாது.
ஊடக சாதனத்தைக் கொள்முதல் செய்தல்
ஒரு வருகையாளர் வீசாவை, அமெரிக்க ஊடக சாதனத்தை அல்லது அலைபரப்பு உரிமைகளைக் கொள்முதல் செய்வதற்காக, அல்லது அயல்நாட்டு ஊடக சாதனத்திற்கான அல்லது அலைபரப்பு உரிமைகளுக்கான கொள்முதல் உத்தரவுகளைப் பெறுவதற்காக, அயல்நாட்டு ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் உபயோகித்துக் கொள்ளலாம், ஏனென்றால் இத்தகைய வீசாக்கள், சாதாரண வர்த்தக வருகையாளர்களால் நடத்தப்படுவதன் நோக்கத்திற்குள்ளேயே வருகின்றன.
விடுப்பு
ஒரு வருகையாளர் வீசாவை உபயோகித்து ஒரு அயல்நாட்டு ஊடகப் பத்திரிக்கையாளர் அமெரிக்காவிற்கு விடுப்பெடுத்துச் செல்ல முடியும் மேலும் அவர் செய்தி குறித்த நிகழ்ச்சிகள் குறித்து செய்தி அறிவிக்காத வரையில், அவருக்கு ஒரு ஊடக வீசா தேவைப்படுவதில்லை.
ஒரு தற்காலிகப் பணி வீசா கொண்டு பயணிப்பது
ஒருசில செயல்பாடுகள், தகவல் தெரிவிப்பது சார்ந்ததாகவும், செய்தி சேகரிப்பது சார்ந்ததாகவும் இருப்பதால் அவை தெளிவாகவே ஊடக வீசாவிற்குத் தகுதியடைந்து விடுகிற அதே வேளையில், மற்றவை அப்படித் தகுதியடைந்து விடுவதில்லை. ஒவ்வொரு விண்ணப்பமுமே அதன் குறிப்பிட்ட நிலையின் முழுப் பொருளில் வைத்தே பரிசீலிக்கப்படுகிறது. ஒரு விண்ணப்பதாரர் ஊடக வீசாவிற்குத் தகுதியடைகிறார் என்பதைத் தீர்மானிப்பதற்காக ஒரு பயணத்தின் நோக்கம் அத்தியாவசியமாகத் தகவல் சார்ந்ததாக இருக்கிறதா என்பதிலும், அது பொதுவாகவே செய்தி சேகரிப்பு நடைமுறையோடு தொடர்புடையதாக இருக்கிறதா என்பதிலும் துணைத் தூதரக அலுவலர் கவனம் செலுத்துகிறார். I வகை பத்திரிக்கையாளர்/ஊடக வீசாவிற்குப் பதிலாக H, O, அல்லது P, வகை வீசாக்கள் போன்றதோர் தற்காலிகப் பணியாளர் வீசா எவ்வெப்போது தேவைப்படுகிறது என்பதைக் கீழுள்ள பட்டியல் விவரிக்கிறது.
ஒரு தற்காலிகப் பணியாளர் வீசாவை, உங்களது பயண நோக்கம் பின்வரும் செயல்பாடுகளுக்காக இருக்கிற பட்சத்தில் உபயோகிக்கலாம்:
வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு அல்லது விளம்பர நோக்கங்களுக்காக படம் பிடிக்கும் விஷயங்கள்
அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதன் நோக்கம், முதன்மையாக வர்த்தக ரீதியிலான பொழுதுபோக்கு அல்லது விளம்பரம் செய்யும் நோக்கங்களுக்கான எண்ணத்தில் இருக்கும் போது, படம் பிடிப்பதற்காக, அல்லது ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக இருக்கிற விண்ணப்பதாரர்கள், ஒரு ஊடக வீசாவை உபயோகிக்க முடியாது. அதற்கு ஒரு தற்காலிகப் பணியாளர் வீசா அவசியமாகிறது.
பிழை திருத்துபவர்கள், நூலகர்கள் மற்றும் காட்சியமைப்பு வடிவமைப்பாளர்கள் போன்ற படத்தயாரிப்பு உதவிப் பணிகள்
பிழை திருத்துபவர்கள், நூலகர்கள் மற்றும் காட்சியமைப்பு வடிவமைப்பாளர்கள் போன்ற தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடுகிறவர்கள், ஊடக வீசாக்களுக்குத் தகுதியடைவதில்லை மேலும் அவர்கள் H, O, அல்லது P வீசாக்கள் போன்ற இன்னொரு வகைப்பாட்டின் கீழ் தகுதியடையலாம்.
மேடையில் நடத்தப்படுகிற கதைகள், தொலைக்காட்சி மற்றும் வினாடிவினா நிகழ்ச்சிகள்
நிஜம் நிகழ்சிகள் மற்றும் வினாடிவினா நிகழ்ச்சிகள் போன்று, கையெழுத்துப் பிரதி இல்லாதவையாக இருக்கும் போதும் கூட, திட்டமிட்டு, மேடையில் நடத்தப்படுவதை ஈடுபடுத்துகிற கதைகள், முதன்மையாக தகவல் தெரிவிப்பது சார்ந்தவை அல்ல மேலும் அவை பொதுவாகவே பத்திரிக்கத்துறையில் ஈடுபடுவதில்லை. அதைப் போலவே, நடிகர்களைக் கொண்டு மேடையில் அரங்கேற்றிய பொழுது போக்குகளை ஈடுபடுத்துகிற ஆவணப் படங்கள் தகவல் சார்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. அது போன்ற தயாரிப்புகளில் பணியாற்றுகிற உறுப்பினர்கள் ஊடக வீசாவிற்குத் தகுதியடைவதில்லை. தற்போதைய திட்டத்திற்கு மாற்றியமைத்த குறிப்பிட்ட ஆலோசனைக்காக ஊடகப் பணியில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றதோர் குடிவரவு வழங்கறிஞரிமிருந்து, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
கலை சார்ந்த ஊடகப் பொருளைப் படைத்தல்
கலை சார்ந்த ஊடகப் படைப்பைத் தயாரிப்பதில் (நடிகர்களை உபயோகிக்கிற ஒன்று) பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்குப் பயணிக்கும் ஊடகப் பிரதிநிதிகள் ஊடக வீசாவிற்குத் தகுதியடைவதில்லை. தற்போதைய திட்டத்திற்கு மாற்றியமைத்த குறிப்பிட்ட ஆலோசனைக்காக ஊடகப் பணியில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றதோர் குடிவரவு வழங்கறிஞரிமிருந்து, தொலைக்காட்சி, வானொலி, மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.
சார்ந்திருப்பவர்கள்
அமெரிக்காவில் முதன்மை வீசா வைத்திருப்பவரோடு அவர் தங்கியிருக்கும் காலத்திற்குச் சேர்ந்து கொள்ள விரும்புகிற வாழ்க்கைத் துணைகள் அல்லது 21 வயதிற்குக் கீழ்ப்பட்ட திருமணமாகாத குழந்தைகளுக்கு, F அல்லது M வீசாக்கள் அவசியமாகின்றன. வீசா வைத்திருக்கும் முதன்மையானவரோடு அமெரிக்காவில் தங்கியிருக்க விரும்பாத, ஆனால் விடுமுறைக் காலங்களுக்கு மட்டும் வருகை தருகிற இல்வாழ்க்கைத் துணைகள் மற்றும்/அல்லது குழந்தைகள், வருகையாளர் (B-2) வீசாக்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியடையலாம்.
I வருவிப்பு வீசாவில் வந்துள்ள வாழ்க்கைத் துணைகள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணியாற்ற முடியாது. அந்த வாழ்க்கைத் துணை அல்லது சார்ந்திருப்பவர் வேலை வாய்ப்பைத் தேடினால், அதற்கான உரிய வேலை வீசா அவசியமாகும்.
விண்ணப்ப உருப்படிகள்
ஒரு I வீசாவிற்காக விண்ணப்பிப்பதற்கு, நீங்கள் பின்வருவனவற்றைச் சமர்ப்பித்தாக வேண்டும்:
- ஒரு குடிவரவாளர் அல்லாதோர் வீசா மின்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவம் DS-160 குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு DS-160 இணையபக்கத்திற்குச் சென்று பாருங்கள்.
- அமெரிக்காவில் நீங்கள் தங்குவதற்கு எண்ணம் கொண்டுள்ள காலத்திற்கு அப்பால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகிற, அமெரிக்காவிற்குப் பயணம் செய்வதற்கான செல்லுபடியாகிறதோர் கடவுச் சீட்டு ( நாடு-குறிப்பான ஒப்பந்தங்கள் விதிவிலக்குகளை வழங்கினால் ஒழிய). உங்கள் கடவுச்சீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், வீசா வேண்டுமென விரும்புகிற ஒவ்வொரு நபரும் ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தாக வேண்டும்.
- கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த ஒரு (1) 2”x2” (5செமீx5செமீ) புகைப்படம். இந்த இணைய பக்கத்தில், தேவையான புகைப்பட வடிவமைப்பு குறித்த தகவல்கள் உள்ளன.
- உங்கள் நாட்டு நாணயத்தில் செலுத்திய, உங்கள் US$160 திருப்பித் தரமுடியாத குடிவரவாளர் அல்லாதோர் வீசா விண்ணப்ப நடவடிக்கைக் கட்டணத்தை செலுத்தியதைக் காண்பிக்கிறதோர் இரசீது. இந்த இணைய பக்கத்தில், இந்தக் கட்டணத்தைச் செலுத்துவது குறித்த இன்னும் அதிகத் தகவல்கள் உள்ளன. ஒரு வீசா வழங்கப்பட்டு விடுகிற பட்சத்தில், உங்கள் நாட்டினத்தைப் பொருத்து, கூடுதலாக ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணம் இருக்கலாம். அயலுறவுத் துறையின் இணையதளம், நீங்கள் ஒரு வீசா வழங்கல் பிரதிச்சலுகைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்பதையும் அந்தக் கட்டணத் தொகை எவ்வளவு என்பதையும் காண உதவலாம்.
- வேலைவாய்ப்பின் அத்தாட்சி:
- பத்திரிக்கை ஊழியர்கள்: உங்கள் பெயர், நிறுவனத்தில் நீங்கள் வகிக்கிற பதவி மற்றும் அமெரிக்காவில் நீங்கள் தங்கும் நோக்கம் மற்றும் கால அளவு ஆகியவற்றைக் கொடுக்கிற, உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
- ஓர் ஊடக ஸ்தாபனத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சுதந்திரமான பத்திரிக்கையாளர்: உங்கள் பெயர், நிறுவனத்தில் நீங்கள் வகிக்கிற பதவி மற்றும் அமெரிக்காவில் நீங்கள் தங்கும் நோக்கம் மற்றும் கால அளவு ஆகியவற்றைக் காண்பிக்கிற, அந்த ஊடக ஸ்தாபனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு நகல்.
- ஊடகப் படப்பிடிப்பு ஊழியர்கள்: உங்கள் பெயர், நிறுவனத்தில் நீங்கள் வகிக்கிற பதவி, படம்பிடிக்கிற நிகழ்ச்சியின் தலைப்பு மற்றும் சுருக்கமான விவரக் குறிப்பு மற்றும் அமெரிக்காவில் நீங்கள் தங்கும் நோக்கம் மற்றும் கால அளவு ஆகியவற்றைக் கொடுக்கிற, உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
- ஊடக ஸ்தாபனத்திற்கான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள சுதந்திரமான படத்தயாரிப்பு நிறுவனம்: உங்கள் பெயர், படம்பிடிக்கிற நிகழ்ச்சியின் தலைப்பு மற்றும் சுருக்கமான விவரக் குறிப்பு, ஒப்பந்தத்தின் கால அளவு மற்றும் அமெரிக்காவில் தங்க வேண்டியிருக்கும் கால அளவு ஆகியவற்றைக் காண்பிக்கிற இப்பணியை நடத்துகிற ஸ்தாபனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
இத்தகைய உருப்படிகளுக்குக் கூடுதலாக, நீங்கள் இந்தச் சேவை வாயிலாகத் தான் நேர்காணலுக்கானதோர் நேரத்தைக் குறித்தீர்கள் என்பதை உறுதி செய்கிற நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதம் ஒன்றை நீங்கள் காண்பித்தாக வேண்டும். துணைத் தூதரக அலுவலருக்கு வழங்கியுள்ள தகவல்களை ஆதரிப்பதாக நீங்கள் நம்புகிற ஆதார ஆவணங்கள் என்னென்ன உண்டோ அவை அனைத்தையும் நீங்கள் கொண்டு வரலாம்.
விண்ணப்பிப்பது எப்படி
படி 1
குடிவரவாளர் அல்லாத வீசா மின்னணு விண்ணப்பப் (டிஎஸ்-160) படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.
படி 2
வீசா விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
படி 3
இந்த இணைய பக்கத்தில் உங்கள் நேர்காணலுக்கான நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுங்கள். உங்களுக்கான நேர்காணல் நேரத்தைக் குறிக்கத் திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்வரும் தகவல்கள் தேவைப்படும்:
- உங்கள் கடவுச்சொல் எண்
- (இந்த எண்ணைக் காண்பதில் உங்களுக்கு உதவி தேவை என்றால் இங்கே சுட்டுக.)
- உங்கள் படிவ உறுதிப்படுத்தல் பக்கத்திலிருந்து கிடைக்கிற பத்து (10) இலக்க பட்டைக் குறியீட்டு எண்
படி 4
உங்கள் வீசா நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தில் அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குச் செல்லுங்கள். உங்களது நேர்காணல் நேரக் குறிப்புக் கடிதத்தின் அச்சிட்ட நகல் ஒன்றையும், DS-160 படிவ உறுதிப்படுத்தல் பக்கத்தையும், கடந்த ஆறு மாதங்களுக்குள் எடுத்த புகைப்படம் ஒன்றையும், உங்களது தற்போதைய கடவுச்சீட்டு, அனைத்து பழைய கடவுச் சீட்டுகள், மற்றும் அசல் வீசா கட்டண இரசீதையும் நீங்கள் கொண்டு வந்தாக வேண்டும். இத்தகைய உருப்படிகள் அனைத்தும் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
ஆதார ஆவணங்கள்
ஆதார ஆவணங்கள் என்பவை, உங்கள் நேர்காணலில் துணைத் தூதரக அதிகாரி பரிசீலிக்கும் அநேகக் காரணிகளில் ஒன்றே ஒன்றாகும். துணைத் தூதரக அதிகாரிகள் ஓவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பார்வையிட்டு, வீசா கொடுப்பது குறித்து முடிவெடுக்கும் போது தொழில் ரீதியிலான, சமூக, கலாச்சார மற்றும் மற்ற காரணிகளையும் பரிசீலிப்பார்கள். துணைத் தூதரக அதிகாரிகள் உங்கள் குறிப்பிட்ட நோக்கங்களையும், குடும்பச் சூழ்நிலையையும், உங்கள் நீண்ட-காலத் திட்டங்களையும், நீங்கள் வசிக்கும் நாட்டில் உள்ள எதிர்நோக்குகளையும் பார்வையிடலாம். ஒவ்வொரு நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டத்தின் கீழ் ஒவ்வொரு பரிசீலனையும் கொடுக்கப்படுகிறது.
எச்சரிக்கை: பொய்யான ஆவணங்களை அளிக்காதீர்கள். மோசடியான அல்லது தவறான ஆவணங்களைக் கொடுப்பது, நிரந்தரமாகவே வீசாவிற்குத் தகுதியடையாமற் போய் விடுவதில் போய் முடிந்து விடலாம். இரகசிதன்மை குறித்துக் கவலையடைகிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் ஆவணங்களை முத்திரயிட்ட உறையில் போட்டு அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகத்திற்குக் கொண்டு வர வேண்டும். அமெரிக்கத் தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வேறு எவருக்கும் உங்கள் தகவல்களைக் கிடைக்கச் செய்யாது மேலும் உங்கள் தகவல்களின் இரகசியத்தன்மையை மதித்து நடக்கும்.
உங்கள் நேர்காணலுக்கு நீங்கள் பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்:
- பத்திரிக்கையாளர் அடையாள அட்டை / நம்பகமான சான்றிதழ்கள்
- உங்களது சுற்றுப்பயண நோக்கம், நீங்கள் தங்க எண்ணம் கொண்டுள்ள கால அளவு, உங்களைப் பணியமர்த்தியுள்ள நிறுவனத்தோடு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிற ஆண்டுகளின் எண்ணிக்கை மற்றும் உங்களுக்குள்ள பத்திரிக்கைத் துறை அனுபவ ஆண்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிற, உங்களைப் பணியமர்த்திய நிறுவனத்திடமிருந்து பெற்றதோர் கடிதம்.
சார்ந்திருப்பவர்களுக்கான ஆதார ஆவணங்கள்
பின்னொரு தேதியில் உங்களது வாழ்க்கைத் துணை மற்றும்/அல்லது குழந்தை ஒரு வீசாவிற்கு விண்ணப்பிக்கிற பட்சத்தில், அந்த விண்ணப்பத்தோடு உங்கள் ஊடக வீசாவின் நகல் ஒன்றைக் காண்பித்தாக வேண்டும்.
இன்னும் அதிகத் தகவல்கள்
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கான வீசாக்கள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு, அயலுறவுத் துறையின் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்.